நடிகர் சூர்யா, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள 'சூரரை போற்று ' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களால் அதிக அளவில் பார்க்கப்பட்டு வருகிறது. 

நடிகர் சூர்யா, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள 'சூரரை போற்று ' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களால் அதிக அளவில் பார்க்கப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடிகர் சூர்யா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், என்னைச் சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உட்பட பலரின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுந்த காலகட்டத்தில், நடிகராக இல்லாமல், தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன் என தெரிவித்து, தான் நடித்துள்ள சூரரை போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறினார். அதன் படி 'சூரரை போற்று' திரைப்படம் அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

மேலும் இந்த மாதத்தில் கடைசியில் வெளியாக உள்ள, 'சூரரை போற்று' படத்தின், ட்ரைலர் விரைவில் வெளியிடப்படும் என, இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் கடந்த வாரம் தெரிவித்த நிலையில், தற்போது 'சூரரை போற்று' மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் சுதா கொங்கரா எப்படி பட்ட இயக்குனர். இந்த படத்தை உருவாக்கும் கரு எப்படி கிடைத்தது. சூர்யா, மாறா கதாபாத்திரத்திற்காக மெனக்கெட்டு கஷ்டங்கள் என்ன என்பது வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளது.

இதுவரை சூர்யாவின் திரைப்படங்களின் தியேட்டர் உரிமை, 40 முதல் 50 கோடி வரை விற்பனையாகும். அது இல்லாமல், மற்ற மொழிகளில் விற்பனையாவது தனியாக நடிக்கும். ஆனால் தற்போது, அமேசான் பிரைம் ஓடிடி தளம், சூரரை போற்று படத்தை, 70 முதல் 80 கோடி வரை பணம் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் இதுவரை இது குறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த மேக்கிங் வீடியோ இதோ..