sonam kapoor shar the phot with lover
தந்தை மகள்
பாலிவுட்டின் பிரபல நடிகர் அனில் கபூர்.இவரது மகள் சோனம் கபூர்.இவரும் பாலிவுட்டின் முன்னணி நடிகையாவர்.இவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூரின் நெருங்கிய உறவினர் கூட.மேலும் தந்தை அனில் கபூர் மகள் சோனம் கபூர் இருவரும் இணைந்து ஷெல்லி தார் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.
தனுஷ்
2013 ம் ஆண்டு வெளியான ராஞ்சனா படத்தின் தமிழ் பதிப்பான அம்பிகாபதி படத்தில் தனுஷின் காதலியாக சோனம் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
பேட் மேன்
கோயம்புத்தூர் தமிழரான அருணாச்சலம் முருகானந்தம் கதையை மையமாக கொண்ட வெளியான பேட் மேன் படம் பாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை பால்கி இயக்க அக்ஷ்ய் குமார் அருணாச்சலம் முருகானந்தம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இதில் சோனம் கபூர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.மேலும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அதிஷ்டசாலி
இந்நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு நான் தான் உலகிலேயே மிக அதிஷ்டசாலி என்று குறிப்பிட்டு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார் சோனம். அதோடு தனது காதலர் ஆனந்த் ஆகுஜாவுடன் இருக்கும் புகைபடத்தையும் பதிவேற்றியிருந்தார்.
பாலிவுட் பிரபலங்கள் பலர் காதலர் தின வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டிருக்க சோனம் கபூரோ தமது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
திருமணம்
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தமது காதலரான விராட் கோலியை கடந்த ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்.அந்த வரிசையில் சோனம் கபூரூக்கும் அவரது காதலர் ஆனந்த் அகுஜாவுக்கும் வரும் ஜூன் மாதம் திருமணம் நடக்கும் என்று பாலிவுட்டில் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது
