பாலிவுட் திரையுலகத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் சோனம் கபூர். நேற்று தன்னுடைய கணவருடன் கடைதிறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, சோனம் கபூரின் ஷூ லேஸை, அவருடைய கணவர் ஆனந்த் அஹுஜா கட்டிவிட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகை சோனம் கபூர் பாலிவுட் திரையுலகில்... தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகைகளில் ஒருவர். நடிகர் தனுஷ் தமிழ் மற்றும் இந்தியில் நடித்த 'ராஞ்சனா' படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

டெல்லியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா என்பவரை கடந்த ஆண்டு, திருமணம் செய்து கொண்டு, அதிகப்படியான படங்களில் நடிப்பதை தவிர்த்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில் இவர், நேற்று தன்னுடைய கணவருடன் சேர்ந்து, பிரபல கடை திறப்பு விழா ஒன்றிற்கு சென்றிருந்தார். 

இவர்கள் இருவருமே ஒரே மாதிரியான ஷூ அணிந்து, சென்றிருந்தனர். திடீர் என சோனம் கபூரின் ஷூ லேஸ் அவிழ்ந்து விட அதனை சற்றும் கெளரவம் பார்க்காமல், ஆனந்த் கட்டிவிட்டார். 

இதனை பலர், வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். சோனம் கபூர், அனைவர் மத்தியிலும் கணவரை ஷூ லேஸ் கட்டி விட வைத்துள்ளது, நெட்டிசன்கள் கடுமையாக விமர்த்து வருகிறார்கள்.