தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட்  நடிகை சோனாக்ஷி சின்ஹா. 

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவர் சமீபத்தில் 18 ஆயிரம் மதிப்புள்ள ஹெட் செட் ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஹெட் செட்டுக்கு பதிலாக அந்த ஆன்லைன் நிறுவனத்தில் இருந்து, துரு பிடித்த இரும்புத் துண்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சோனாக்ஷி சின்ஹா ஒரு புகழ்பெற்ற ஆன்லைன் நிறுவனத்தின் மூலம் ஹெட்செட் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அந்த நிறுவனத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில், ஹெட்செட் அவருக்கு வந்து சேர்ந்துள்ளது. ஆசை ஆசையாக இந்த பார்சலை பிரித்த சோனாக்ஷிக்கு காத்திருந்தது அதிர்ச்சி மட்டும்தான். காரணம் இந்த பார்சலில் இருந்தது ஹெட்செட் இல்லை. அதற்கு பதிலாக ஒரு இரும்புத் துண்டு உள்ளே இருந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை சோனாக்ஷி. அதனை புகைப்படம் எடுத்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் நகுல் மனைவி ஐபோன் ஒன்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்ய, அதற்கு பதிலாக போலியான ஒரு செல்போன் வந்து சேர்ந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல் தொடர்ந்து ஆன்லைன் மூலம் மோசடிகள் நடப்பது அடிக்கடி ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குபவர்களை அச்சமடைய செய்துள்ளது.