some one police complained on actor santhanam
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் நடிகர் சந்தானம் தன்னை தாக்கியதாக வழக்கறிஞர் ஒருவர் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாஜக தென் சென்னை மாவட்ட துணை தலைவர் பிரேம் ஆனந்த் விஜயா என்பவர் வழக்கறிஞராக உள்ளார். இவர் இன்று மதியம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், நடிகர் சந்தானத்திற்கும் தனக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருந்ததாகவும் அதனால் அவர் தன்னை தாக்கிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் புகார் அளித்த இவர் அடிபட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரேம் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
