Social media users are commenst against kamal hassan for support gayathri
"சேரி பிஹேவியர்" இது தான் இப்போது ஹாட் டாபிக் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்து பரபரப்பாகவும், விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமலும், சர்ச்சையும் சண்டையாக நடந்து வருகிறது. அதில் பங்கேற்றுள்ள நடிகை காயத்ரி ரகுராம் "எச்சைங்க", "சேரி பிஹேவியர்" என தன்னுடன் இருக்கும் சக போட்டியாளர்களை கொச்சையாக பேசுவது, அவமானப்படுத்துவது என நாளுக்கு நாள் தொடர்கிறது. காயத்திரியின் இந்த திமிர் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் சந்தித்த கமல், காயத்ரி பேசியதை தான் எழுதி தரவில்லை. அதனால் அதற்கு யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்றார். மேலும் சேரி பிஹேவியர் என்று சொன்னதை சென்சார் செய்யவும் முடியாது என்றார். சில நாட்களுக்கு முன்பு கஞ்சா கருப்பு பரணியை கெட்ட வார்த்தை திட்டும்போது கஞ்சா கறுப்பு பேசிய கெட்ட வார்த்தையை பீப் சவுண்ட் போட்டது. அதேபோல காயத்ரியின் இந்த சர்ச்சை பேச்சுக்கும் பீப் போட்டுருக்கலாமே. இது கூட பரவாயில்ல இதுகுறித்து கேள்விகேட்டால் சாதியை ஒழித்து விட்டீர்களா? என கேட்கிறார் கமல்.

வக்காலத்து வாங்குகிறாரா கமல்?
காயத்ரி என்பவருக்கு சாதி வெறி இருக்கிறதா? எச்சைங்க, சேரி பிஹேவியர் என்ற வார்த்தைகள் கீழ்தரமானது என்பது காயத்திரிக்கு தெரியாத ஒன்றாகவே எடுத்துக்கொள்வோம் ஆனால் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர், முற்போக்குவாதி என சொல்லிக்கொள்ளும் கமலுக்குத் தெரியாமல் போனதா? அவர் சொன்னது தவறுதான் என ஒரே வார்த்தையில் சொல்லியிருந்தால் இந்த பிரச்சனையில் வீரியம் குறைந்திருக்கும். சேரி பிஹேவியர் என்ற வார்த்தை பேசியதற்கு காயத்திரி மன்னிப்புக் கேட்பார்" என்று சொல்லியிருந்தால் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருக்காது.

தான் நடத்தும் இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க, பரபரப்பில் உச்சத்தில் இருக்கும் இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கை தொடர கமல் ஹாஸன் உண்மையாகவே விசுவாசி தான். அதான் அவரே சொல்லிட்டாரே பணத்தேவைக்காகத்தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துகிறேன். பொதுச்சேவை செய்ய பிக்பாஸ் நடத்தவில்லை என்று அவர் சொல்வது சரியாகவே இருக்கட்டும் பணத்துக்காக ஒரு சாதியினரை கீழ்த்தரமாக விமர்சிப்பது சரியா சார்? அதனால்தான் உங்கள் நண்பன் மகள் காயத்ரி சொன்ன சேரி பிஹேவியரை நியாயப்படுத்துகிறீர்களா?
