Social media glamour doll Rakul preeth sing

தமிழனுக்கு எப்போதுமே டெல்லி என்றால் கசப்புதான். ஆனால் இப்போது டெல்லி புள்ளி ஒன்றின் பின்னால்தான் மொத்த தமிழ் இளசுகளும் மெர்சலாகி கிடக்கின்றன. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஐந்தடி ஆறு அங்குல டெல்லி ரசகுல்லா அது! அவர்தான் ரகுல் ப்ரீத்சிங். ‘என்னமோ ஏதோ’ டெல்லிக்காரியாம் என கோலிவுட் சில வருடங்களுக்கு முன் கண்டுக்காமல் விட, அக்கட தெலுங்கு தேசம் போயி ஜிலீர் கவர்ச்சியால் கன்னாபின்னா ஹிட்டானார். மீண்டும் ‘ஸ்பைடர்’ மூலம் தமிழ் கூறும் நல்லுலகம் வந்தார். ஆனால் ஸ்பைடர் கல்லா வலை கட்டவுமில்லை, கமர்ஷியல் ஹிட் ஆகவுமில்லை. ‘அதான் சொன்னோம்ல ரகுல் ஒரு ராசியில்லாத நடிகைன்னு’ என்று தற்போது ஃபீல்டிலிருக்கும் பவுடர் பேபிகள் சிலர் கொளுத்திப் போட்டனர். 

ஆனால் நேற்று வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பும், அதில் கார்த்தியுடன் ரகுல் அடித்திருக்கும் கவர்ச்சி லூட்டியும் ஏற்கனவே குளிரடிக்க துவங்கியிருக்கும் தமிழ்நாட்டில் எக்ஸ்ட்ரா நடுக்கத்தை கிளப்பியிருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் அடுத்த படத்தில் சோனாக்‌ஷ் சின்ஹாவுடன், ரகுலும் இருக்கிறார் என்கிறார்கள். இதுபோக சூர்யாவுடன் ஒரு படம், மீண்டும் கார்த்தியுடன் ஒரு படம் என்று ரகுலின் தமிழ் கிராஃப் ஜிவ்வ்வ்வென ஏறுகிறது. ராசியில்லாத நடிகை எனும் பட்டத்தை ஜஸ்ட் தீரன் படம் மூலம் அடித்து நொறுக்கியிருக்கிறார் ப்ரீத். 

இதற்கிடையில் இவரது ஹாட் கிளாமர் போட்டோக்கள் சில இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. இடுப்பும், மடிப்புமாக, தொப்புளும், அதில் கண்சிமிட்டும் கம்மலுமாக ரகுலின் லோ டாப் போட்டோக்கள் கிறங்கடிக்கின்றன. 

ஒரு காலத்தில் நமீதா, மந்த்ரா என்று பிரம்மாண்டமாய் மயங்கிக் கிடந்த தமிழ் ரசிகன் சமீப காலமாய் தமன்னா, காஜல், சமந்தா என்று அளவான, அழகான ஏற்ற இறக்கங்களை மட்டுமே ரசிக்க துவங்கியுள்ளான். அந்த வகையில் ரகுலின் இந்த ஸ்பெஷல் ஹாட் போட்டோக்கள் அவனை தவிப்பில் தந்தியடிக்க வைத்திருக்கின்றன.