snehan marriage annoucement

கவிஞர் சிநேகன் பாண்டவர் பூமி படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர். இந்தப் படத்தில் அவர் எழுதிய 'அவர் அவர் வாழ்க்கையில்...' மற்றும் 'தோழா தோழா' என்கிற பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தால் தொடர்ந்து இவருக்கு பல படங்களில் பாடல் எழுத வாய்ப்புகள் வந்தன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ள சிநேகன், யோகி, உயர் திரு 420 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தற்போது ராஜராஜ சோழனின் போர் வாள் , பொம்மிவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் பிரபல தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில சர்ச்சைகளை சந்தித்தாலும், மிகவும் பாசமானவர் என்று மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். மக்களின் ஆதரவோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் இருந்த இவர், தற்போது தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரும் ஜூன் மாதம் திருமண அறிவிப்பு வரும் என கூறியுள்ளார்.