தமிழ் சினிமாவில் விஜய், அஜித், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சினேகா. 

இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பின், தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்காமல் போனது.

இதனால் குழந்தை குடும்பம் என சில நாட்கள் திரையுலகை விட்டு ஒதுங்கியே இருந்த சினேகா, இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடித்த 'வேலைக்காரன்' படத்தின்  மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இந்த படத்தில் இவர் வலுவான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும், சில நிமிடங்கள் மட்டுமே, இவர் இந்த படத்தில் வந்ததால், தன்னுடைய அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்தார்.

மேலும் இவரை குணச்சித்திர வேடங்களில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பளர்கள் அணுகிய போதும், "முடியவே முடியாது... வலுவான கதாப்பாத்திரத்திம் இருந்தால் மட்டுமே நடிப்பேன், அண்ணி, அம்மா என சின்ன சின்ன ரோலில் நடிக்க முடியாது என அடம் பிடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது இவர் அடுத்ததாக,  'கொடி' படத்தின் இயக்குனர், செந்தில்குமார் இயக்க உள்ள புதிய படத்தில் சினேகா... தனுஷின் அம்மாவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

மேலும் இந்த படத்தில், அப்பா வேடத்திலும் தனுஷ் நடிப்பதால்... அடம் பிடித்து கொண்டிருந்த சினேகாவை படக்குழுவினர் அம்மா வேடமாக இருந்தாலும் தனுஷுக்கு ஜோடியாக தானே நடிக்கிறீர்கள் என கூறி சமாதானம் செய்த பின் இந்த படத்தில் நடிக்க சினேகா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.