நடிகை சினேகா கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ள விஷயத்தை, நடிகரும் சினேகாவின் கணவருமான பிரசன்னா மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உள்ள, நட்சத்திர தம்பதிகளில் ஒருவர் சினேகா பிரசன்னா ஜோடி. திரைப்படம் ஒன்றில் இணைந்து நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலரவே, இருவரும் தங்களுடைய பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின், திரையுலகை விட்டு விலகிய சிநேகாவிற்கு, 2015 ஆம் ஆண்டு விஹான் என்கிற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை வளர்ந்த பின், மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கினார் சினேஹா.

இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தார். எனினும் கர்ப்பமாக இருக்குபோதே, அடிமுறை என்கிற தற்காப்பு கலையின் பயிற்சி எடுத்து சினேகா நடிப்பில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான, 'பட்டாஸ்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. சினேகாவின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது நடிகை சினேகா - பிரசன்னா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை, 'தை மகள் வந்தாள்' என்று... பதிவிட்டு பிரசன்னா மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பலரும் இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.