sneha and prasanna help agricultures
தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கடந்த மாதம் டெல்லிக்கு சென்றிருந்தார் என்பது நாம் அறிந்த ஒன்று. பெருமைமிகு தமிழர்கள் விழாவில் நடிகர் விஷால் நலிந்த விவசாயிகள் 1௦பேருக்கு உதவினார்.
அவர் செய்த நற்பணியை பார்த்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆவலோடு இருந்த நடிகர்பிரசன்னா மற்றும் நடிகை சினேகாவுக்கு நலிந்த விவசாயிகளின் பட்டியலை வழங்கி அவர்களுக்கு உதவுமாறு கூறி அவர்களுக்கு தகவலளித்தார்.

அதன்படி பிரசன்னா மற்றும் சினேகா நலிந்த விவசாயிகள் 1௦ பேருக்கு உதவும் வகையில் இன்று நடந்த நிகழ்வில் 2-லட்சம் ரூபாய் நிதி வழங்கினர். தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைவரும் குரல் கொடுத்து வரும் இவ்வேளையில் பிரசன்னா , சினேகா ஆகியோர் செயலில் இறங்கி செய்துள்ள இந்த நற்ச்செயல் பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
இந்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...






