தமிழகத்தில் பிக்பாஸ்  நிகழ்ச்சி,  மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக   நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக தற்போது இடம்பெற்றுள்ள புதுமுகங்கள் ஓவியாவின்  இடத்தை பிடிக்க முடியவில்லை 
இந்நிலையில், சற்று சர்ச்சையும் சண்டையுமாக இருக்கட்டுமே என காஜலை பிக் பாஸ் வீட்டிற்கு  அனுப்பிள்ளனர்.இதன் தொடர்ச்சியாக நேற்று கன்பெஷன் ரூமிலிருந்து கமலிடம்  பேசிய காஜல்  சில பல கேள்விகளுக்கு அவருக்குண்டான பாணியில் பதிலளித்து  வந்தார்.

அப்போது  நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் போது  உங்களுக்கு வரவேற்பு  இருந்ததா என  கமல் கேள்வி கேட்டார் .
இதற்கு பதிலளித்த காஜல், வரும்  போது என்னையாருக்கும் பிடிக்கவில்லை.ஆனால் இப்பொழுது  பேச  தொடங்கியவுடன் ஒரு சிலருக்கு  என்னை பிடிசிருக்குமென  நம்புவதாக சொன்னார். அதில்  குறிப்பாக  சினேகனை எனக்கு  நன்கு  தெரியும். ஆனாலும் அவருக்கு என்னை பிடிக்கவில்லை என  கூறினார் .
எப்படி சொல்கிறீர்கள் என கமல் கேட்டதற்கு, மற்றவர்களை சிநேகன் கட்டி பிடித்த மாதிரி என்னை   கட்டிப்பிடிக்கவில்லை என மனவருத்தமாக கூறினார்.