Asianet News TamilAsianet News Tamil

விறுவிறுப்பாக நடந்து வரும் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்!

சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். தற்போது சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த சிவன் ஸ்ரீநிவாசன் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.கே.ஆர் மஹாலில் இன்று தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 

small screen nadigar sangam election in today
Author
Chennai, First Published Jan 26, 2019, 2:06 PM IST

சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். தற்போது சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த சிவன் ஸ்ரீநிவாசன் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.கே.ஆர் மஹாலில் இன்று தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு, மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. இதில் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் உள்ள 1200 வாக்காளர்களும் தங்களுடைய வாக்கை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த தேர்தலில், சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நடிகை நிரோஷா, சிவன் சீனிவாசன், ரவிவர்மா, போஸ் வெங்கட், ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நிரோஷா அணியில், பரத் செயலாளர் பதவிக்கும், ஸ்ரீதர் பொருளாளர் பதவிக்கும், பி.டி.தினகரன், கன்யா பாரதி ஆகியோர் துணை தலைவர் பதவிக்கும், விஜய் ஆனந்த், ரவீந்திரன், மோனிகா, முனிஸ் ராஜா, ஆகியோர் இணை செயலாளர் பதவிக்கும் போட்டி இடுகின்றனர்.

சிவன் சீனிவாசன் அணியில், செயலாளர் பதவிக்கு பரத் கல்யாண், துணைத்தலைவராக ராஜசேகர், மனோபாலா, பொருளாளராக ஸ்ரீவித்யா, இணைச் செயலாளராக தளபதி தினேஷ், எம்.டி.மோகன், கற்பகவல்லி, சவால் ராம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

போஸ் வெங்கட் அணியில் செயலாளராக பி.கே.கமலேஷ், துணை தலைவர் பதவிக்கு சோனியா ராஜா, பொருளாளராக நவீன், இணை செயலாளராக தாடி பாலாஜி, கே.கமல்ஹாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

14 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நான்கு அணிகள் சார்பில் 56 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 94 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். லியாகத் அலிகான், தம்பிதுரை ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்து தேர்தலை நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios