தமிழ் சினிமாவில் சில வருடங்கள் ஒஹோ ஓஹஹோ!ன்னு வலம் வந்தவர் சூர்யா. ஆனால் கடந்த பல படங்கள் அவருக்கு செமத்தியாக காலை வாரி விட்டதால் ப்ரைம் லிஸ்டில் இருந்து பத்து அடி பின்னே கிடக்கிறார் மனுஷன். அதனால் இப்போது அவரை நம்பி காசு போடும் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை எக்கச்சக்கமாக குறைந்துவிட்டது. 

சூர்யாவே வேண்டி அழைத்து கால்சீட் கொடுத்த பின்னாடியும் கூட, காமெடி நடிகர் சூரியை வைத்துதான் படமெடுப்பேன் என்று இயக்குநர் வெற்றிமாறன் அடம் பிடிக்குமளவுக்கு போயிடுச்சு சூர்யா நிலைமை. ஆனாலும் எப்படியாவது மீண்டு வரவேண்டும் என்பதற்காக சொந்த காசை கொட்டோ கொட்டென கொட்டி தன்னை வைத்து, தானே படமெடுக்க துவங்கியிருக்கிறார். ஆனாலும் தேறுவோமா அல்லது தேய்ந்தே போவோமா? என்பதே அவரது கவலை. அந்த வகையில் ‘சூரரைப் போற்று’ படத்தை பெரிதாய் நம்பிக் கிடக்கிறார் மனிதர். விஜய் வீட்டில் நடந்த ரெய்டுக்குப் பின் கோடம்பாக்கம் ‘அடுத்து யாரோ?’ என தலைசுத்திக் கிடக்கும் நிலையில், சூர்யா வீட்டில் ரெய்டு நடத்துவதற்கான அத்தனை சூழல்களையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் அவரது சொந்த டாடியான சிவகுமார். 


எப்படி தெரியுமா?....சமீபத்தில் கோயமுத்தூரில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட சிவகுமார் “மது போதையில வண்டி ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களால் ஏகப்பட்ட உயிரிழப்புகள் நடக்குது. இதனால் எவ்வளவு குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்குதுன்னு தெரியுமா? மதுதான் இந்த நாட்டை சீரழிக்குது. அதைத் தடை பண்ணாமல் வேறு எந்த குற்றத்தையும் தடுத்து நிறுத்த முடியாது. 
மக்கள் நலனில் அக்கறை இருக்கிற எந்த அரசாங்கமும் மதுக்கடையை நடத்தாது. அப்படி நடத்தினால் அது மோசமான நாடாகத்தான் இருக்கும்.” என்று, டாஸ்மாக் நடத்தும் தமிழக அரசுக்கு எதிராக கொந்தளித்துக் கொட்டிவிட்டார் மனிதர். 

சிவாவின் இந்த சீறல் பேச்சு, கவர்மெண்டின் காதுகளுக்குப் போயிருக்கிறது. கடுப்பான முக்கிய தலைகள் ”ஓவரா பேசுறாரே. பேசாம இவரு பசங்க வீட்டுல ரெய்டு நடத்தணும். வரி கட்டாம அவங்க ரெண்டு பேரும் பாக்கி வெச்சிருந்தால் பொது வெளியில ’நேர்மையாய் மேடையில் நடிக்கும் சிவகுமார் குடும்ப லட்சணத்தை பாருங்க’ன்னு செய்தியும், வீடியோவும் போட்டு கிழிச்சுட வேண்டிதான்.” என்று  கர்ஜித்திருக்கின்றனர். 
ஜோதிகா குடும்பத்தின் அரசியல் புள்ளி மூலமாக, ஆளுங்கட்சி தரப்பின் இந்த கோப விவகாரங்கள் ஜோதிகாவின் கவனத்துக்குப் போக, அவர் சூர்யாவிடம் சொல்லிப் புலம்பி ’கஷ்டம்தான்!’ என்று தலையிலடித்திருக்கிறார்.