பொன்.ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் சமந்தா.

விரைவில் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையை தொடங்க இருக்கும் சமந்தாவின் கடைசி படம் இதுவாக கூட இருக்கலாம்.

“மெரினா”வில் தன் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினாலும், அப்படியே படிப்படியாக முன்னேறி தற்போது நயந்தாரா வரைக்கும் வந்துள்ளார் சிவகார்த்திகேயன். அடுத்து சம்ந்தாவுடனும் நடித்துவிட்டால் முன்னனி நடிகைகளுடன் நடித்துவிட்ட திருப்தியை அவர் அடைந்துவிடுவார்.

சிவகார்த்திகேயன் – சமந்தா இருவரும் நடிக்கும் இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைப்போல் இந்தப்படத்தை முழுக்க முழுக்க கிராமப் பின்னணியில் படமாக்க இருக்கிறார் பொன்ராம்.

இந்தப் படத்தில் வீரமான பெண்ணாக நடிக்கும் சமந்தா அந்த கதாபாத்திரத்திற்காக சிலம்பம் கற்றுக் கொண்டுள்ளார். உடற்பயிற்சிக் கூடத்தில் சமந்தா சிலம்பம் சுற்றுவது போன்ற வீடியோ சில நாள்களுக்கு இணையத்தை சுற்றி வந்தது.

வேலைக்காரன் படப்பிடிப்பு முடிந்த சில வாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.