எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ‘எங்க வீட்டுப்பிள்ளை’டைட்டிலை தயாரிப்பு நிறுவனம் தர மறுத்ததால் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்துக்கு ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்று முன்னர் அதன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்‌ஷர்ஸ் வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தை ‘கடைக்குட்டி சிங்கம்‘ திரைப்படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்திற்கு ’நம்ம வீட்டு பிள்ளை’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது. 

முதலில் இப்படத்துக்கு எம்.ஜி.ஆர் நடிப்பில் விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்திருந்த ‘எங்க வீட்டுபிள்ளை’டைட்டிலை வாங்கவே படக்குழுவினர் முயற்சித்தார்கள். அதற்கு அனுமதி தர விரும்பாத நிறுவனம் எங்கள் பட நிறுவனத் தலைப்பைக் கேட்டு யாரும் எங்களை அணுக வேண்டாம் என்று எல்லோருக்கும் பொதுவாக ஒரு கடிதத்தையே தயாரிப்பத்துக்கு அனுப்பி வைத்திருந்தனர். சன் பிக்‌ஷர்ஸா கொக்கா? இதோ எங்க வீட்டுப்பிள்ளை அப்படியே ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ஆகிவிட்டார்.