Asianet News TamilAsianet News Tamil

சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ மே 1 ம் தேதி ரிலீஸாகாது...

மே 1ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட அஜீத் படம் தள்ளிப்போனது போல சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ படமும் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதை அப்பட நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

sivakarthikeyan's mr local release postponed
Author
Chennai, First Published Apr 20, 2019, 10:05 AM IST

மே 1ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட அஜீத் படம் தள்ளிப்போனது போல சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ படமும் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதை அப்பட நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.sivakarthikeyan's mr local release postponed

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மிஸ்டர் லோக்கல்’. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். படம் துவங்கிய சமயத்தில் இப்படம் மே 1-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. அதையொட்டி சிவகார்த்திகேயன் அஜீத்துடன் மோதுகிறாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு மாற்றி அப்பட நிறுவனம் அறிவித்திருந்தது.sivakarthikeyan's mr local release postponed

அதேபோல் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் ’தேவராட்டம்’ படத்தையும் இந்த நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் மே 17-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த இரு படங்களின் ரிலீஸ் தேதியை மாற்றி புதிய ரிலீஸ் தேதியை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கவுதம் கார்த்திக்கின் தேவராட்டம் வருகிற மே 1-ந் தேதியும், சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் மே 17-ந் தேதியும் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணம் எதையும் அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios