சமீப காலமாக விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுகிறது. அந்த வகையில் 'வெண்ணிலா கபடிக்குழு', 'சென்னை 28', 'தோனி', 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற படங்கள் உதாரணம் என கூறலாம்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் காமெடியனாகவும், பாடகராகவும் அனைவராலும் அறியப்பட்ட அருண்ராஜா காமராஜ், இயக்குனராக அறிமுகமாகிறார். இன்னும் பெயரிடாத இந்தப்படம், முழுக்க முழுக்க பெண்களின் கிரிக்கெட் பற்றிய படமாக எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.  இந்தப்படம் குறித்து படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறுகையில், உலகிலேயே பெண்கள் கிரிகெட்டை மையப்படுத்திய முதல் படம் இது தான் என்றும் கிரிக்கெட் மட்டும் இல்லாமல் ஒரு அப்பாவையும், மகளையும் பற்றிய கதை. என் மனதுக்கு மிக நெருக்கமான படம், ஏனென்றால், அது வெளிப்படுத்தும் உணர்வுகள் அப்படிப்பட்டவை. 

இந்தப்படத்தில் சத்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் அப்பா - மகளாக நடிக்கிறார்கள். சத்தியராஜ், இளவரசு, முனிஷ்காந்த், புதுமுக நடிகர் தர்ஷன் ஆகியோர் சம்பந்தப்பட்ட முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும். அடுத்தக் கட்ட படப்பிடிப்பில் தான் கிர்க்கெட் போட்டிக்கான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். 

கிரிக்கெட் சம்மந்தமான காட்சிகள் முழுவதும் சென்னையில் நடைபெற உள்ளதாகவும் அதற்காக தேர்தெடுக்கப்பட்ட நடிகர் நடிகைகள் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.