கொரோனா ஊரடங்கின் காரணமாக திரையரங்கில் வெளியாக வேண்டிய படங்கள், ஓடிடி தளத்தில் வெளியாகியது. அதில் முக்கியமாக நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின்,  வரலக்ஷ்மி நடித்த டேனி, யோகிபாபுவின் காக்டெய்ல், ஆகியவை.

கடந்த வாரம், நடிகர் வைபவ் மற்றும் வாணி போஜன் நடிப்பில், லாக்கப் படம் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. சிறு படஜெட் படங்கள் ஓடிடியில் வெளியாக திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர் தரப்பில் பெரிதாக எந்த எதிர்ப்பும் எழ வில்லை என்றாலும், சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் அக்டோபர் 30 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்கிற அறிவிப்புக்கு தொடர்ந்து தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க, அடுத்த மாதம் 2 ஆம் தேதி, நடிகர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ரணசிங்கம் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படமும், ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றாலும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.