விதவிதமான கெட்டப்பில் 'டாக்டர்' பட பிரபலங்கள்! வெளியானது புதிய போஸ்டர்!

ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 

sivakarthikeyan movie new poster released

'டாக்டர்' திரைப்படம், மார்ச் 26 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான புரொமோஷன்களும் மிகவும் வித்தியாசமாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான 'செல்லமா செல்லமா' மற்றும்  'so baby’ பாடலுக்கு தொடர்ந்து நல்ல விமர்சனம் கிடைத்த நிலையில், செல்லமா செல்லமா பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பாசத்தை படைத்தது. இதை தொடர்ந்து  புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

sivakarthikeyan movie new poster released

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து, வரும் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், பிக்பாஸ் அர்ச்சனா, யோகி பாபு , உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .

sivakarthikeyan movie new poster released

ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் அட்டகாசமான லுக்கில் உள்ளார். மேலும் நாயகி பிரியங்கா மோகன், பிக் பாஸ் புகழ் அர்ச்சனா, யோகி பாபு, இளவரசு, உள்ளிட்ட டாக்டர் பட பிரபலங்கள் பலரும் இதில் உள்ளனர். குறிப்பாக அனைவரது கையிலும் ஒரு கண்ணாடி உள்ளது. இது என்ன கண்ணாடி என பலரையும் சிந்திக்க வைத்துள்ளது இந்த போஸ்டர்.

‘டாக்டர்’ திரைப்படம் வெளியாக இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்து...   டீசர், டிரைலர், போன்றவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios