சிவகார்த்திகேயன் ரெமோ படத்தின் வெற்றி விழாவில் அழுதது எல்லோரையும் வியக்க வைத்தது. என்னை நிம்மதியாக வேலை செய்ய விடுங்கள் என்று சொன்னது அரங்கில் கூடி இருந்த எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது சிவகார்த்திகேயன் மீது மூன்று தயாரிப்பாளர்கள், அவர் பணம் வாங்கி விட்டு நடிக்க மறுக்கிறார் என புகார் சொன்னதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சிவாவிடம் விசாரணை நடந்தது.

இதில் அவர் 2013 ம் வருடம் வேந்தர் மூவிஸ் மதன், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் மற்றும் ஞானவேல் ராஜா ஆகியோர் என்னிடம் கால்ஷீட் கேட்டார்கள்.

இதில் நான் ஞானவேல் ராஜா படத்தில் நடிப்பதற்கு மட்டும் அப்போது ஒப்பந்தமாகி அட்வான்ஸ் வாங்கியது உண்மை என்றும்.

மற்றவர்களின் படங்களில் நடிக்க பணம் ஏதும் வாங்கப்படாமல் பேச்சளவில் மட்டுமே ஒற்றுக்கொள்வது போல சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது என்னுடைய மார்க்கெட் ட்ரெண்டை கொண்டு என்னை அவர்களது படத்தில் நடிக்க மிகவும் வற்புறுத்துகிறார்கள்.

அட்வான்ஸ் வாங்கிய படத்தில் மட்டுமே நடிப்பேன். மற்றபடி பேச்சளவில் ஒப்பு கொண்ட மற்றவரின் படங்களில் நடிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் யாராவது தொடர்ந்து பிரச்னையை கொடுத்தால் சட்டம் மூலம் சந்திப்பேன் என்று அதிரடி பதில் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.