Asianet News TamilAsianet News Tamil

மிஸ்டர் லோக்கல் படத்துல நயன்தாராவுக்கு இப்படி ஒரு கேரக்ட்டரா? சீக்ரெட்டை லீக் பண்ண சிவா

மிஸ்டர் லோக்கல் திரைப்படம் ஜாலியான திரைப்படமாக இருக்கும் எனவும், நயன்தாரா கேரக்ட்டர் பற்றிய கேரக்ட்டர் ரகசியத்தை லீக் செய்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan leaked nayanthara roll in mr local
Author
Chennai, First Published May 14, 2019, 12:00 PM IST

வேலைக்காரன் படத்திற்குப் பின், நடிகை நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மிஸ்டர் லோக்கல்.

இந்த படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி இசையில் அமைந்த 'தாறு மாறு' என்கிற பாடலின் லிரிகள் வீடியோ வெளியாகி, ரசிகர்களை குஷி படுத்தியது. மேலும் இந்த படத்தில் யோகி பாபு, சதீஷ், ஆகிய காமெடி நடிகர்கள் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் கடைசியாக அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில், 'கனா' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பின் வெளியாகும் இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Sivakarthikeyan leaked nayanthara roll in mr local

சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. சென்னையில் நடைபெற்ற படத்தின் அறிமுக விழாவில் பேசிய படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், மிசத்தார் லோக்கல் படத்தில் வில்லனே கிடையாது என்றும் படம் முழுவதும் காமெடி படம் என்றும் குறிப்பிட்டார். படத்தின் இயக்குநர் ராஜேஷ், ஜாலியான படத்தை தந்திருப்பதாகவும் நயன்தாரா வில்லனுக்கு பதிலாக நடித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இயக்குநர் ராஜேஷின் கடந்த மூன்று படங்கள் மரண மொக்கையாக அமைந்ததால், சிவகார்திகேயனோடு இடைந்துள்ள இந்த படமாவது கைக்கொடுக்குமா என்பதை ரிலீஸ் வரை பொறுத்திருப்போம்.

Follow Us:
Download App:
  • android
  • ios