Sivakarthikeyan in the servant film three bad things?
வேலைக்காரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மூன்று கெட்டப்பில் நடித்துள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் வேலைக்காரன்.
இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதன்முறையாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் சினேகா, பிரகாஷ் ராஜ், பகத் பாசில், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் வருகிறார் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் வெளியாகி உள்ளது. மேலும், இது சிவகார்த்திகேயனின் மற்ற படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ரெமோ படத்தில் பெண் வேடத்தில் நடித்த சிவகார்த்திகேயனும், அந்தப் படத்தின் படக்குழுவும் போஸ்டர் ரிலீஸ் வரை அதை சஸ்பென்ஸாகவே வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
