இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படம்  'ஹீரோ'. இந்த  படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் டிசைன் மற்றும் ரிலீஸ் தேதி இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் உலகம் முழுவதும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர். 

கிறிஸ்துமஸ் தின விடுமுறையை குறிவைத்து வெளியிடப்படும் இந்த படத்தின், டைட்டில் டிசைனுடன் கூடிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் , நடிகர் விஜய்தேவாரகொண்டாவின் படத்திற்கும் வைக்கப்பட்டு, அந்த படம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, பிரபல இயக்குனர் பிரியா தர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.