பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘  மெரினா’ , ‘ கேடி பில்லா கில்லாடி ரங்கா ‘ ஆகிய படங்களில்  நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் மூலம் இருவரும் மூன்றாவது முறையாக  இணைகிறார்கள். இந்த படத்திற்கு வைக்கவுள்ள டைட்டிலால் சில விஷமிகள் திரி கொளுத்திப் போடுட்டுள்ளனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மெரினா,கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் மூலம் இருவரும் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இந்த படத்திற்கு வைக்கவுள்ள டைட்டிலால் சில விஷமிகள் திரி கொளுத்திப் போடுட்டுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் பதினாறாவது பெயரிடப்படாத இந்த படத்தை எந்திரன்,சர்கார் , பேட்ட ஆகிய பிரமாண்ட படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 4 வது படம் இது.

சிவகார்த்திகேயனின் 16 வது படமான இந்த படத்தில் 2 முன்னணி கதாநாயகிகள் நடிக்கிறார்கள். துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அனு இம்மானுவேல் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேருகிறார். இது அவரது 2 வது தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்த முதல் திரைப்படமான கனா படத்தில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் D.இமான் அவர்கள் இசை அமைக்கிறார் . சிவகார்த்திகேயன் நடிப்பில் இமான் இசைமைக்கும் இந்த படம் இருவரும் இணையும் 4 வது திரைப்படம் . இப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிபதிவு செய்கிறார்.

மேலும், இந்த படத்தில் பிரபல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களான பாரதிராஜா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் இவர்களுடன் நட்டி, RK சுரேஷ் ,காமெடி நடிகர்களான சூரி, யோகி பாபு மற்றும் வேலராமமூர்த்தி ,நாடோடிகள் கோபால் , சுப்பு பஞ்சு , அர்ச்சனா, ரமா என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் எளிமையாக தொடங்கியது.

தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கும் இந்த படத்திற்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ எனும் டைட்டிலை முடிவு செய்துள்ளதாம் படக்குழு. ஆனால், இது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு எக்கச்சக்க ஹிட் கொடுத்த படம். ஆகவே இதன் உரிமையை பழைய "விஜயா புரொடக்‌ஷன்" நிறுவனத்திடமிருந்து வாங்கிட சிவகார்த்திகேயன் புதுப்பட டீம் மூவ் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், ’இப்ப வந்த சிவகார்த்திக்கு எம்.ஜி.ஆர். டைட்டில் கேக்குதா?’ என்று சில விஷமிகள் அரசியல் செய்ய துவங்கியுள்ளனர். அநேகமாக இந்த பிரச்சனை மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும் எனத் தெரிகிறது. காரணம் இந்த படத்தை தயாரிப்பது சான் பிக்ச்சர்ஸ்.