Sivakarthikeyan exit in the film release competition Vijay Sethupathi Entry ...

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படம் வரும் 29-ஆம் தேதி வெளியாகாது என அறிவிக்கப்பட்ட நிலையில் விஜய் சேதுபதியீன் ‘கருப்பன்’ படத்தை அந்தத் தேதியில் வெளியிடுகிறார்கள்.

மோகன் ராஜ இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘வேலைக்காரன்’ படம் ஆயுதப் பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு இம்மாதம் 29-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் படத்தின் பின்னனி வேலைகள் இன்னும் முடியாததால், வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடிப்பில் அசத்தி வரும் விஜய் சேதுபதியின் ‘கருப்பன்’ இந்த தேதிய் இல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தப் படத்தில் நாயகியாக தன்யாவும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடித்துள்ளனர். ஏற்கனவே செப்டம்பர் 29-ஆம் தேதி, ஜி.வி.பிரகாஷின் ‘செம்ம’, நயன்தாராவின் ‘அறம்’, கௌதம் கார்த்திக்கின் ‘ஹர ஹர மகாதேவகி’, சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.