தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஷாலும், சிவகார்த்திகேயனும் பட வெளியீட்டில் நேரடியாக மோத உள்ளார்களாம்.

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வருபவர் விஷால். இவர் நடித்த எனிமி திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. ரஜினியின் அண்ணாத்த படத்துக்கு போட்டியாக வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, மலையாள நடிகர் பாபுராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இப்படத்தை டிசம்பர் மாதம் இறுதியில் வெளியிட திட்டமிட்டிருந்த விஷால், அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாக உள்ள காரணத்தால் ரிலீஸ் தேதியை மாற்றினார். அதன்படி வருகிற ஜனவரி 26-ந் தேதி ‘வீரமே வாகை சூடும்’ படத்தை வெளியிடப்போவது அறிவித்தார்.

இந்நிலையில், அப்படத்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் ‘டான்’ படமும் அதே தினத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் இந்த இரு படங்களும் வெளியீட்டில் நேரடியாக மோத உள்ளன. டான் படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.