Asianet News TamilAsianet News Tamil

சிவகார்த்திகேயன் வைத்த ஸ்வீட் செக்..! பெருசா எதிர்பார்த்து கடுப்பான உதயநிதி ஸ்டாலின்..

நடிகர்களான நாம் சொன்னால் மிக எளிதாக மக்களிடம் சென்று சேரும். அதை பலர் ஃபாலோவும் செய்ய துவங்குவார்கள்’ என்று தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களிடம் நட்பாக உதயநிதி கோரிக்கை வைத்தாராம்

Sivakarthikeyan disappoints Udhayanidhi on Pongal day
Author
Chennai, First Published Jan 15, 2022, 3:49 PM IST

கடந்த தேர்தலில் தன் தாத்தா கருணாநிதியின் சென்டிமெண்ட் தொகுதியான சேப்பாக்கத்தில் நின்று இமாலய வெற்றி பெற்றார் உதயநிதி ஸ்டாலின். ஒரு எம்.எல்.ஏ.வாக மக்கள் பணி மட்டுமில்லாது, அரசுக்கும் திரைத்துறைக்கும் இடையில் சிறப்பான நல்லுறவு பாலமாகவும் உதயநிதி விளங்குகிறார்.

இந்நிலையில், தைப்பொங்கல் நாள் பற்றி வாழ்த்து செய்திகளை தங்கள் சோஷியல் மீடியாவில் பதிவேற்றும்போது அதில் ‘தைப்பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்! என்று பதிவிடுங்கள். நடிகர்களான நாம் சொன்னால் மிக எளிதாக மக்களிடம் சென்று சேரும். அதை பலர் ஃபாலோவும் செய்ய துவங்குவார்கள்’ என்று தமிழ் சினிமா துறையின் மிக முக்கிய நடிகர்களிடம் நட்பாக உதயநிதி கோரிக்கை வைத்தாராம்.

Sivakarthikeyan disappoints Udhayanidhi on Pongal day

ஏற்கனவே சோஷியல் மீடியாக்களில் ‘தை 1 தான் தமிழ் புத்தாண்டின் துவக்க நாள்’ எனும் கோஷம் விண்ணை பிளந்துகொண்டுள்ளது. தமிழ்ப் புத்தாண்டு தை ஒன்றா அல்லது சித்திரை ஒன்றா என்ற விவாதமும் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில்தான் உதயநிதி தன்னிடம் நன்கு பழகக்கூடிய அனைத்து ஹீரோக்களிடமும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தங்கள் வாழ்த்துச் செய்தியில் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தன் வீட்டில் தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் மகிழ்வாக பொங்கல் விழா கொண்டாடிய புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து, ’அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள். ஹேப்பி பொங்கல், ஹேப்பி சங்ராந்தி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Sivakarthikeyan disappoints Udhayanidhi on Pongal day

இதைப் பார்த்துவிட்டு உதயநிதி அப்செட்டாகிவிட்டாராம். காரணம், சிவகார்த்திகேயனுக்கென்று பெரிய ரசிக பட்டாளம் இருப்பதோடு குடும்பங்கள் விரும்பும் நடிகராகவும் இருக்கிறார். அவர் தனது வாழ்த்துக்களில் ‘தமிழர் புத்தாண்டு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டிருந்தால் அதன் ரீச் பெரியதாக இருந்திருக்குமே! என்பதுதான்.

அதெல்லாம் சரிங்க, தமிழ் புத்தாண்டு உண்மையிலேயே தை ஒன்றா இல்ல சித்திரை ஒன்றா? அரசியல் சாயலில்லாமல் விடைதருவார் யாரோ!

Follow Us:
Download App:
  • android
  • ios