sivakarthikeyan criket vairal news



நடிகர் சிவகார்த்திகேயன் எப்போதும் எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் மிகவும் கலகலப்பான மனிதர் என்பது பலருக்கும் தெரியும். சின்னத்திரையின் செல்லப் பிள்ளையாக இருந்த இவர் தற்போது வெள்ளித்திரையில், விஸ்வரூபம் எடுத்துள்ளார். அவர் நடித்த அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந் நிலையில் விரைவில் இவர் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்துள்ள வேலைக்காரன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில்  அறம் படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நயன்தாரா நடித்துள்ளது படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.

 

மேலும் தற்போது சிவகார்த்திகேயன்  இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார்  இந்தப் படத்தில்  இவருக்கு ஜோடியாக சமந்தாவும்,  வழக்கம் போல் சூரி காமெடியனாகவும் நடிக்கின்றனர்.   24 ஏ.எம். நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில்  சிம்ரன், நெல்போலியன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

தற்போது இந்தப் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இதில் படப்பிடிப்பு போக கிடைத்த சிறிய ஓய்வு நேரத்தில் சிவகார்த்திகேயன், சூரியுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. 

இந்தப் படத்தின் முதல் போஸ்டர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.