சீமராஜா, கனா ஆகிய படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘மிஸ்டர் லோக்கல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.  இந்த  படத்தின் போஸ்டர் சற்று முன்பு வெளிவந்தது. அதில் சிவகார்த்திகேயன் கோட் சூட்டில் சோபாவில் அமர்ந்திருப்பது போல காட்டப்பட்டுள்ளது.

சமீப காலத்தில் போஸ்டர் காபி என தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் தற்போது அதில் சிவகார்த்திகேயனும் சிக்கியுள்ளார். Mr.லோக்கல் போஸ் "ஜில்லா" படத்தில் தளபதி விஜய் கொடுத்த ஃபோஸையும் மற்றும் தல அஜித்தின் வீரம் படத்தின் ஸ்டைலையும் அப்படியே, அப்பட்டமாக காப்பி அடித்து தான் எடுத்துள்ளனர். அதனால் தற்போது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் அனைவரும் Mr.லோக்கல் போஸ்ட்டரை விமர்சித்து வருகின்றனர்.

ஸ்டூடியோ கிரீன் பேனரில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதற்கு முன்பு சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் வேலைக்காரன் படத்தில் ஒன்றாக நடித்தனர். 

மேலும், இப்படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, சதீஸ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.