தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். அதோடு மிக பெரிய ரசிகர்கர் பட்டாளமும் இவருக்கு உண்டு அது மட்டும் இல்லாமல் இவர் தீவிர அஜித் ரசிகர் அப்படி பட்ட இவர் அஜித்துடன் நேரடி மோதலுக்கு தயாராகிவிட்டார்.

"சீமராஜா" படத்தின் சறுக்கலுக்குப் பின்  சிவகார்த்திகேயன், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில்  ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படம் காமெடி என்டெர்டெயினராக உருவாகிறது.

சமீபத்தில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தநிலையில் படம் மே 1-ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் பிங்க் பட ரீமேக் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சிவகார்த்திகேயன் படமும் அதேநாளில் ரிலீசாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை தன்வீ ஃபிலிம்ஸ் உடன் இணைந்து சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனம் இதற்கு முன்னதாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை திருச்சி மற்றும் தஞ்சையில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியிருந்தது.என்பது குரிப்பிடதக்கது.