நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தன்னுடைய 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு, அவருக்கென சிறப்பு காமன் டிபி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தன்னுடைய 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு, அவருக்கென சிறப்பு காமன் டிபி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

நடிகர் சிவகார்த்திகேயன், பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி, 1985 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர். இவரது தந்தை போலீஸ் அதிகாரி. இன்ஜினியரிங் மாணவரான, தற்செயலாக கலந்துகொண்ட நிகழ்ச்சி தான் 'கலக்க போவது யாரு'. இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருந்த சிவகார்த்திகேயன் பின்னர் தன்னுடைய திறமையால் விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மாறினார்.

இதைத்தொடர்ந்து டான்ஸ் திறமையை வெளிப்படுத்த ஜோடி நம்பர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அது மட்டுமின்றி, விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானாலும், மெரினா திரைப்படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்தார். தற்போது பல்வேறு சோதனைகளை கூட சாதனையாக மாற்றி, பின்னணி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், என முன்னணி பிரபலமாக மின்னி வருகிறார்.

இவர் நடிப்பில் விரைவில் 'டாக்டர்' திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் அயலான் படத்திலும் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக 'டான்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஓய்வில்லாமல் செம்ம பிசியாகி நடித்து வரும் சிவகார்த்திகேயன் இன்று தன்னுடைய 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்காக பிரத்தேயேக காமென் டிபி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிபி தற்போது சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது.

மேலும் பிரபலங்கள் பலரும் சிவகார்த்திகேயன் பிறந்த நாளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பிரபலங்கள் வாழ்த்து:

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…