சிவகார்த்திகேயன் அறிமுகமானதில் இருந்து சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு இவர் வந்ததால், இவருக்கு காமெடி நன்றாக வரும் என்பது இவரை வைத்து இயக்கிய இயக்குனர்களுக்கு தெரிந்திருந்தது. 

ஆரம்பத்தில் இருந்து இவர் நடித்த பல படங்களில் குடித்துவிட்டு பெண்களை கிண்டல் செய்யும் காட்சிகள் இருக்கும். குறிப்பாக இவர் கீர்த்தி சுரேஷுடன் நடித்த 'ரஜினி முருகன்' படத்தில் குடித்து விட்டு ஆட்டமே போடுவார். மேலும் இவரை அடிக்கடி கிண்டலும் செய்வார். 

இது போன்ற காட்சிகள் இளம் வட்ட ரசிகர்களிடம் நல்ல ஆதரவைப் பெற்றாலும், குடும்பத்துடன் வந்து படம் பார்க்கும் ரசிகர்களிடம் விமர்சனத்திற்கு உள்ளானது.

இதனால் இதுபோன்ற காட்சிகளில் நடிக்க போவதில்லை என்று முடிவு செய்துள்ளாராம் சிவகார்த்திகேயன். இது குறித்து அவர் கூறுகையில்... 'வேலைக்காரன்' படத்திற்கு பிறகு எனக்கு சமூக பொறுப்பு கூடி இருக்கிறது. வேலைக்காரன் படத்தில் மது அருந்தும் காட்சியோ... பெண்களை கிண்டல் செய்வது போன்ற காட்சியோ இல்லை. இருப்பினும் இந்த படத்தை யாரும் பாராட்டவில்லை. 

ஆனாலும் இனி வரும் என்னுடைய அனைத்து படங்களிலும் இப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். மேலும் இனி நான் நடிக்க உள்ள படங்களில் அப்படியானகாட்சிகள் இருக்காது என்றும் இதனை உணர்ந்து என்னை இயக்கும் இயக்குனர்கள் இது போன்ற காட்சிகளை வைக்க மாட்டார்கள் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.