இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில்,  சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துவரும் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாகவும் மற்றொரு கதாநாயகியாக அனு  இமானுவேல் நடிப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்தப் படம் குறித்து வெளியாகியுள்ள தகவலில்...  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கிறாராம். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு  இமானுவேல் நடிக்கிறார்.

 

இந்த படம் முழுக்க முழுக்க சிவகாத்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இடையேயான அண்ணன், தங்கை உறவை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது. மேலும் படக்குழுவினர் சிவா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாப்பாத்திரம் குறித்த தகவலை ரகசியம் காத்து வந்ததாகவும் இந்த தகவல் வெளியாகி அவர்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளதாகவும் கூறப்படுகிது. 

இந்த படத்தில் யோகிபாபு, சூரி, சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ், பாரதிராஜா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  டி இமான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.