சின்னத்திரையில் ஒரு போட்டியாளராக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய நடிகர் சிவகார்த்திகேயன், இன்று விஜய் அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் போட்டி போடும் அளவிற்கு முன்னணி நாயகனாக வளர்ந்து நிற்கிறார்.

தற்போது இவர் தான் அஜித்துடன் நடித்த படம் ஒன்றை பற்றி முதல் முறையாக மீடியாக்கள் முன்னிலையில் மனம் திறந்துள்ளார்.

அவர் எப்போது அஜித்துடன் படம் நடித்தார் என யோசிக்கிறீர்களா....??? பலருக்கும் சிவகார்த்திகேயன் அறிமுகம் கொடுத்தது மெரினா படம் என்று தான் தெரியும்.

இந்த படங்களுக்கு முன் அஜித் நடித்த 'ஏகன்' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்தாராம், ஆனால் கதையில் ஒரு சில மாற்றங்கள் கொண்டுவர பட்டதால் சிவகார்த்திகேயன் நடித்த பகுதியை எடிட்டர் கத்தரி போட்டுவிட்டார்.

தற்போது முன்னணி நாயகனாக இருக்கும் சிவகார்த்திகேயன் இது குறித்து இப்போது கூறியுள்ளார், மேலும் அஜித்துடன் நான் நடித்த பகுதி நீக்க பட்டாலும், அஜித்துடன் நடித்த சந்தோசம் அலாதியானது என தன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார் .