Asianet News TamilAsianet News Tamil

காதலரை கரம் பிடித்து சபதத்தை நிறைவேற்றிய "சிவகாமி"... வைரலாகும் நடிகை மகாலட்சுமியின் திருமண புகைப்படங்கள்...!

தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். அந்த சீரியல் மூலம் தமிழக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். மகாலட்சுமி தற்போது தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். 

Sivakami Serial Actress Mahalakshmi Wedding Photos Going Viral
Author
Chennai, First Published Dec 20, 2019, 12:02 PM IST

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் மகாலட்சுமி. சின்னத்திரையிலும் கலக்கி வரும் இவர், தற்போது மலையாளத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "சிவகாமி" சீரியலில் நடித்து வருகிறார். அந்த சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். மகாலட்சுமி தற்போது தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். 

Sivakami Serial Actress Mahalakshmi Wedding Photos Going Viral

நடிகை மகாலட்சுமி நீண்ட காலமாக நிர்மல் கிருஷ்ணா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இவர்களது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள், சின்னத்திரை நடிகர், நடிகைகள் பங்கேற்று, இளம் ஜோடியை வாழ்த்தினர். 

Sivakami Serial Actress Mahalakshmi Wedding Photos Going Viral

கேரளா ஸ்டைலில் கழுத்து நிறைய நகை அணிந்து, திருமணமான மகிழ்ச்சியில் திழைக்கும் மகாலட்சுமியின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இளம் காதல் தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios