விஜய்சேதுபதி-கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கி வருகிறார், இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 6 ஆம் தேதி தொடங்கி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க நடிகை நிஹாரிகா ஒப்பந்தமாகியுள்ளார். இவர் கடந்த ஆண்டு வெளிவந்த 'ஒக மனசு' என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்தவர். 

இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான் மேலும் பிரபல தெலுங்கு நடிகர் நாகேந்திரபாபுவின் மகளும் தெலுங்கு சூப்பர்  ஸ்டார் சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் பெயர் வைக்க படாத இந்த படத்தில், விஜய் சேதுபதிக்கு காதல், ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும் இன்று கூறப்படுகிறது.