பாகுபலி படத்திற்குப் பிறகு, மிக அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவான சைரா நரசிம்மா படத்தில், அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, ரவி கிஷன், ஜெகபதி பாபு, தமன்னா, என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. 


சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம், ரசிகர்களிடையேயும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 


இதனைத் தொடர்ந்து, பிரபல இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கும் புதிய படத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருக்கிறார். இது, அவர் நடிக்கும் 152-வது படமாகும். இந்தப் படத்தையும், சிரஞ்சீவியின் மகன் ராம்சரணே தயாரிக்கிறார். சமீபத்தில், இதற்கான பூஜை போடப்பட்டது. 

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில், சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா கமிட்டாகியுள்ளாராம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கொரட்டலா சிவாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கடைசியாக, 2006ம் ஆண்டு வெளியான ஸ்டாலின் படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து திரிஷா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சுமார் 140 கோடி பட்ஜெட்டில் சிரஞ்சீவி-152 படத்தை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இதற்காக, ஹைதராபாத்தில் சைரா நரசம்ம ரெட்டி படப்பிடிப்பு நடந்த இடத்திலேயே பிரம்மாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு வருகிறதாம். 

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பிரபல ஒளிப்பதிவாளர் திரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரபல பாலிவுட் இசையமைப்பாளர்கள் அஜய் - அதுல், சிரஞ்சீவி-152 படத்திற்கு இசையமைக்க உள்ளார்களாம். 

தற்போது, படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ஷூட்டிங்கை வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் துவங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.