’உன்னைக் கட்டிப்பிடிக்கணும் போல இருக்கு’...யாரைப் பார்த்து இப்படிச் சொன்னார் ஞானி இளையராஜா?...

இசைஞானி இளையராஜாவின் நண்பர்கள் பட்டியலில் எத்தனையோ பேர் இருந்தாலும் அதில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பிரத்தியேகமான இடம் உண்டு. ‘ராரா...போரா’என்று அதட்டலாக ராஜாவை அழைக்கும் உரிமை கொண்ட ஒரே நபர் எஸ்.பி.பிதான். அப்படிப்பட்ட நண்பர்கள் சில மாதங்களாக பேசிக்கொள்ளாமல் இருந்தநிலையில்,’உன்னைக்கட்டிப்பிடிக்கணும்போல இருக்குடா’என்று சொல்லி ராஜா தன்னை  அழுத்தமாகக் கட்டிப்பிடித்துக்கொண்டதாகச் சொல்கிறார்.

singer sp balu speaks about ilayaraja

இசைஞானி இளையராஜாவின் நண்பர்கள் பட்டியலில் எத்தனையோ பேர் இருந்தாலும் அதில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பிரத்தியேகமான இடம் உண்டு. ‘ராரா...போரா’என்று அதட்டலாக ராஜாவை அழைக்கும் உரிமை கொண்ட ஒரே நபர் எஸ்.பி.பிதான். அப்படிப்பட்ட நண்பர்கள் சில மாதங்களாக பேசிக்கொள்ளாமல் இருந்தநிலையில்,’உன்னைக்கட்டிப்பிடிக்கணும்போல இருக்குடா’என்று சொல்லி ராஜா தன்னை அழுத்தமாகக் கட்டிப்பிடித்துக்கொண்டதாகச் சொல்கிறார்.singer sp balu speaks about ilayaraja

பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா ஆகிய 3 பேரும் ஐதராபாத்தில் நவம்பர் 3-ந்தேதி நடக்கும் இசை நிகழ்ச்சியில் ஒரே மேடையில் பாட உள்ளனர். இதையொட்டி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இளையராஜா தனது பாடல்களை பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தாரே? அவருடன் மோதல் தீர்ந்து விட்டதா? என்றுநிருபர்கள்  கேள்வி எழுப்பினார்கள். 

அக்கேள்வியை சுவாரசியாமாக ரசித்த எஸ்.பி.பி,“இளையராஜாவுக்கும் எனக்கும் இடைவெளி என்பது ஒருபோதும் இல்லை. அவர் எப்போது அழைத்தாலும் போவதற்கு நான் தயாராகவே இருப்பேன். அவர் அழைத்தார். நான் போனேன். முன்பு மாதிரியே சேர்ந்து பணியாற்றினோம். ஒரு குடும்பத்தில் இருக்கிறவர்கள் இடையே சிறு மனஸ்தாபங்கள் வரும். பிறகு சரியாகி விடும். மீண்டும் இணைந்து விடுவார்கள்.அதுமாதிரிதான் எங்களுக்கும் நடந்தது. இருவரும் சில நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்றோம். அவர் இசையமைப்பில் சமீபத்தில் 2 பாடல்களை பாடினேன். ஒரு பெரிய மரத்தை புயல் வந்து சாய்த்து விட்டு போய் விடும். ஆனால் அருகம்புல் எப்போதும் சாயாமல் அப்படியே இருக்கும். நான் என்னை  என்னை ஒரு அருகம்புல் மாதிரிதான் நினைக்கிறேன்.singer sp balu speaks about ilayaraja

இளையராஜாவுக்கும் எனக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை சிறியதுதான். இருவரும் அதை எப்போதோ  மறந்து விட்டோம்.  சமீபத்திய ஒரு சந்திப்பின்போது,’உன்னை கட்டிப்பிடிக்கணும் போல் இருக்குடா? என்று இளையராஜா சொன்னார். உடனே போனேன் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டோம். அதோடு எல்லா பிரச்சினையும் தீர்ந்து விட்டது.” இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறினார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios