கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில், கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.

அதே நேரத்தில் வெளிநாட்டில் இருந்து, இந்தியா வருபவர்களுக்கு கொரோனா பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதால், சாதாரண சளி பிடித்தால் கூட மருத்துவரை பார்க்க வேண்டியது அவசியம் என்றும், அவர்கள் தங்களை தானே தனிமை படுத்தி கொண்டால், மற்றவர்களுக்கு பரவாமல் தவிர்க்க முடியும் என பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் லண்டன் சென்று திருப்பிய பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து, அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவரை தனிமை படுத்தி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். என்பதை நேற்றைய தினமே பார்த்தோம்.

இவர், லண்டனில் இருந்து திரும்பியதும், கொரோனா அறிகுறியுடன் கிட்ட தட்ட  3 விருந்து விழாக்களில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. விஐபி மற்றும் விவிஐபிக்கள் கலந்து கொண்ட இந்த விருந்து நிகழ்ச்சியில் பாடகி கனிகா கபூர், சகஜமாக அனைவருடனும் பழகியதால் மற்றவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமா என சந்தேகம் எழுந்துள்ளதால், இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மேலும் இவர் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது 3 பிரிவுகளின் கீழ் உத்திரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அதே போல்... லக்னோவில் பாடகி கனிகா கபூர் விருந்து விழாவில் கலந்து கொண்ட நட்சத்திர ஓட்டல்களில் ஒன்றான தாஜ் ஓட்டல் தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டுள்ளது. அங்கு பணிபுரிபவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்கிற சோதனையும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.