நடிகர் கார்த்தி அறிமுகம் கொடுத்த பருத்திவீரன் படத்தில் அனைவர் மனதிலும் இடம் பிடித்த ஊர் ஓரம் புளியமரம் பாடலை பாடியவர் கிராமிய இசை கலைஞர் பாண்டி.

இந்த பாடல் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து, வெண்ணிலா கபடி குழு, மாட்டுதாவணி உள்ளிட்ட சில படங்களில் பின்னணி பாடல் பட்டியுள்ளார், அதே போல் தனது மனைவி பச்சையம்மாளுடன் இணைந்து ஏராளமான இசை கச்சேரிகளில் பாடியுள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் திடீர் என மாரடைப்பால் மரணமடைந்தார்... இதை கேள்வி பட்ட அவரது மனைவி பச்சையம்மாளும் உடனே இறந்து விட்டார்.

அந்யோனியமாக வாழ்ந்த இந்த இசை தம்பதிகளின் திடீர் மரணம் விருது நகர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.