எதிர்காலத்தில் பாலியல் பஞ்சாயத்துக்களை விசாரிக்கும் முழுநேர நாட்டாமையாகிவிடும் எண்ணத்தில் இருக்கிறாரோ என்னவோ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் விவகாரத்திலும் களம் இறங்கியிருக்கிறார் பாடகியும் கவிஞர் வைரமுத்துவின் பரமவைரியுமான சின்மயி.

நாடு முழுவதுமுள்ள மகளிர் அமைப்புகள் தலைமை நீதிபதியை பாலியல் குற்றத்திலிருந்து விடுவித்த அவசர தீர்ப்புக்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில், அவருக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்கு சென்னை காவல்துறையிடம் பாடகி சின்மயி அனுமதி கேட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றம் சொன்ன பிறகு பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் சின்மயி, சென்னை காவல்துறையில் அனுமதிக் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அக்கடிதத்தில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் கொடுத்த புகாரை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருப்பதாக சின்மயி கூறியுள்ளார். சென்னையில் போராட்டம் நடத்த அவர் அனுமதி கேட்டுள்ளார்.