தன் குரல் வளத்தால் பாடலின் மூலம் கவர்ந்தவர் சின்மயி, மேலும் முன்னனி நடிகைகள் அனுஷ்கா, சமந்தா, த்ரிஷா போன்ற நாயகிகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்துள்ளார்.

இவரின் குரல் வல்லமைக்கு தேசிய விருது பெற்றுள்ளார், இந்நிலையில் சின்மயி நாளை மாலை சென்னை சேத்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.

இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காக பல பிரபலங்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் இதில் கிடைக்கும் பணத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக செலவு செய்யப்படவுள்ளதாக சின்மயி தெரிவித்துள்ளார்.

இதில் அவர் சற்று வித்தியாசமாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள்ள நேரம் இல்லாதவர்கள், நீங்கள் விரும்பும் தொகையை அதற்கான வங்கி கணக்கில் போடலாம் என்று ட்விட்டர் மூலம் தகவல்களை பகிர்ந்துள்ளார்.