Asianet News TamilAsianet News Tamil

பெண்ணின் உணர்ச்சியை கிண்டலடித்த சேவாக்....பதிலடி கொடுத்த சின்மயி...

singer chinmaye tweet for shewag
singer chinmaye-tweet-for-shewag
Author
First Published Feb 27, 2017, 3:50 PM IST


நேற்று ஒரு பெண் இந்திய ராணுவத்தில் இருந்த தன் தந்தையை கார்கில் போரில் இழந்தேன் என்   ஒரு வீடியோவை  சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார், அது வைரலாக பரவி பலரது கவனத்தை ஈர்த்தது.

மேலும் அதில் அவர் கூறுகையில் 'பாகிஸ்தான் என் தந்தையை கொல்லவில்லை, போர் தான் கொன்றது. இந்த பிரச்சனையை பேசி தீர்த்திருந்தால் என்னை போன்ற பலர் தந்தையோடு இருந்திருப்பார்கள்' என உருக்கமாக அந்த பெண் அட்டையில் எழுதிய வார்த்தையில் கூறியிருந்தார்.

அதை பார்த்த கிரிக்கெட் வீரர் சேவாக், "நான் இரண்டு முறை முச்சதம் அடிக்கவில்லை, என் பேட் தான் அடித்தது" என கலாய்த்திருந்தார்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேவாகிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கிரிக்கெட் என்பது ஜென்டில் மேன்கள் விளையாட்டு, இது உங்களுக்கு கிடைத்த பரிசு, ஆனால் நீங்கள் ஒரு ஜென்டில் மேன் என்பதை மறந்துவிட்டிர்களா இன்று என   மறைமுகமாக ஷேவாக்கை தாக்கியுள்ளார் சின்மயி.

Follow Us:
Download App:
  • android
  • ios