நடிகர் சூர்யாவை வைத்து சிங்கம், சிங்கம்2, சிங்கம் 3 என தொடர்ந்து ஹிட் கொடுத்துவருபவர் பிரபல இயக்குனர் ஹரி.
முன்பு எடுத்த இரண்டு பாகத்தை விட சமீபத்தில் வெளியான 'சி3' திரைப்படதிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஹரியின் விறுவிறுப்பான திரைக்கதை இந்த படத்திலும் இருப்பதாக விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே இவரை பாராட்டி 2டி என்டர்டென்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் அவருக்கு தங்க சங்கிலியை பரிசாக அளித்தார்.
இந்நிலையில் சூர்யா ஹரிக்கு ஆச்சரியமான பரிசு ஒன்றை அளித்துள்ளார். டொயட்டோ நிறுவனத்தின் புத்தம் புதிய மாடலான டொயோட்டா ஃபார்ட்டியூனர் கார் ஒன்றை அன்பு பரிசாக அளித்துள்ளார். புதிய காரின் முன் சூர்யாவும், ஹரியும் நிற்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் தற்போட்ஜு வைரலாகி வருகிறது.
மேலும் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடித்துள்ள 'சி3' திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடியை பெற்றுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
