நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'சிந்துபாத்'. இந்த படத்தை ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து, 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' உள்ளிட்ட படங்களை இயக்குள்ள அருண்குமார் இயக்கியுள்ளார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்துள்ளார்.  இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த மாதம் கடைசியில் வெளியாக உள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் படக்குழுவினர், சிந்துபாத் படத்தில் இருந்து காதல், குறும்பு கலந்த  வீடியோ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நெஞ்சே உனக்காக என்று தொடங்கும் இந்த பாடலில் அஞ்சலியை, காதலிக்க வைக்க, பல்வேறு கெட்டப்பில் விஜய் சேதுபதி அவருடைய  வீட்டை சுற்றி சுற்றி வருவது, மகன் சூர்யாவுடன் அடிக்கும் ரகளை என பாடல் வரிகளும், அதில் இடம்பெற்றுள்ள காட்சிகளும் ரசிக்கும் வகையில் உள்ளது.

வீடியோ: