சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான 'காலா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி முழு நேர அரசியல் வாதியாக உருவெடுப்பர் என அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில், திடீர் என இளம் இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆனார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  வெளியான மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் பெயர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வைரல் ஆனது. 

விரைவில் பேட்ட  அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. அதில் நடிகை திரிஷா,  ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் படமாக்க உள்ளார்.  

இந்த படத்தில் இதுவரை ரஜினியுடன் ஜோடி சேராத நடிகைகளாக இருந்து வந்த சிம்ரன், திரிஷா ஆகியோர் இணைந்து இந்த படத்தில் நடிக்கிறார்கள். அதே போல் விஜய் சேதுபதியும் மிகவும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்திற்கு,  அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த நிலையில் நடிகை சிம்ரன் திடீரென தனது ட்விட்டரில் 'பேட்ட' என பதிவிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் படத்தில் இடம்பெறும் காட்சியா, இல்லை என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். எனினும் அவர் 'பேட்ட' என பதிவிட்டுள்ளதால் இது படத்தில் அவருடைய கெட்டப்பாக கூட இருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.