‘இந்த வாட்டி மிஸ் ஆயிடுச்சி. அடுத்த வாட்டி வந்தா ஸ்லிம்பாடி சிம்புவாத்தான் வருவேன். இல்லாட்டி அங்கேயே செட்டில் ஆயிடுவேன்’ என்று ஒரு வீராப்பான சபதத்தோடு நேற்று இரவு அமெரிக்கா கிளம்பியுள்ளார் வம்புத் தம்பி சிம்பு. அவரது இந்த அதி பயங்கர முடிவால் ரசிகர்கள் திகைத்துப்போயுள்ளனர்.

இரு வாரங்களுக்கு முன்பு ரிலீஸாகி இரு தினங்களிலேயே வசூலில் படுத்த ‘வ.ரா.வ’வின் தோல்வியால் அப்செட் ஆன சிம்பு, தனது நட்பு வட்டாரத்தில் மிகத் தீவிரமாக நடத்திய விசாரணையில் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அவர்கள் சொன்னது சிம்புவின் ஓவர் வெயிட்டை. ஏறத்தாழ ஒரு குண்டப்பாவாகவே  தான் மாறியிருப்பதை உணர்ந்த சிம்பு தற்போது அதிரடியாக அமெரிக்கா புறப்பட்டுவிட்டார்.

அமெரிக்காவில் சுமார் 50 நாட்களுக்கும் தங்க உத்தேசித்திருக்கும் சிம்பு ஏப்ரல் முதல் வாரம்தான் சென்னை திரும்புகிறார். இந்த 50 நாட்களில் தனது எடையில் பாதியைக் குறைத்து தனது போட்டியாளர் தனுஷ் போல் ஒல்லிப்பிச்சானாக மாறிவிட்டுத்தான் சென்னை திரும்புவது என்பதில் மிக மிக உறுதியாக இருக்கிறார் சிம்பு. ஸோ அமெரிக்காவில் தனது பாதி நேரத்தை அவர் ஜிம்மிலேயே செலவழிக்க உத்தேசித்திருப்பதாகவும் மீதி நேரங்களில் மட்டுமே எண்டெர்டெயின்மெண்டில் ஈடுபடுவார் என்றும் நம்பப்படுகிறது.

சென்னை திரும்பியதும் ஏப்ரல் முதல் வாரம் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் முழுமூச்சாக இறங்குகிறார். தமிழக அரசியல் தகிடுதத்தங்களை வச்சு செய்யும் படமாக இந்த ‘மாநாடு’ உருவாக இருக்கிறது என்கிறது வெங்கட் பிரபு வட்டாரம்.