தமிழ் சினிமாவில் அதிக பெண் ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவரை பொறுத்தவரை இவர் தன்னுடைய மனதில் பட்ட கருத்துக்களை வெளியில் சொல்லி தானாகவே பல பிரச்சனைகளில் மாட்டிக்கொள்வார்.

கிட்ட தட்ட ஓவியாவும் அப்படி பட்டவர் தான், காரணம் ஓவியாவுக்கு பொய் சொல்ல தெரியாது மாறாத மனதில் வைத்துள்ள எதையும் மறைக்காமல் வெளிக்காட்டி வந்ததால் தான் இவர் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்கள் பலருக்கு எதிரியாகி நிற்கிறார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு அதிரடி ட்விட் போட்டார் அது என்ன வென்றால் நான் ஓவியாவை திருமணம் செய்து கொள்ள தயார். அவர் மிகவும் தைரியமான பெண் என்றும், கடவுள் அவரை எப்போதும் ஆசீர்வதிப்பார் என்றும் கூறி இருந்தார்.

சிம்பு இந்த ட்விட் போட்டதும் இது மிகவும் வைரலாக தொடங்கியது. இதனால் இந்த ட்விட்டை போட்ட சில நிமிடத்தில் அதனை தூக்கிவிட்டார் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது.