நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள 'ஈஸ்வரன்' திரைப்படம், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில், 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளிக்கவேண்டும் என இன்று காலை அறிக்கை வெளியிட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்தார் நடிகர் சிம்பு.

அதில்,  "ஈஸ்வரன்" பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான். திரையுலகம் செழிக்க வேண்டும். அதற்கான வாசலை மாஸ்டரும், ஈஸ்வரனும் செய்யும் என்று நம்புகிறேன். 

அரசாங்கம் கடைகள், மால்கள் , கடற்கரை என எல்லாமே முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டன.  திரையரங்குகள் முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டாலொழிய அந்த பழைய நிலை வராது.வசூல் நஷ்டமே ஏற்படும். 

அரசும் தயைகூர்ந்து 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து,  பாதுகாப்பு விதிகளை அதிகரித்து,  திரையரங்க உரிமையாளர்களையும், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விரைந்து தமிழ்ப் புத்தாண்டிற்குள் நூறு சதவீத இருக்கை ஆக்ரமிப்பு குறித்து உத்தரவிட்டால், மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம். நன்றி சிலம்பரசன் என தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதே போல் ஏற்கனவே, தளபதி விஜய் கடந்த வாரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாஸ்டர் படம் மட்டும் இன்று, பல படங்கள் எடுத்து முடிக்கப்பட்டு வெளிவராமல் உள்ளது. இதனால் பல தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் இதற்க்கு அரசு தரப்பில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இவர்களது கோரிக்கைகளை கருத்தில் கொண்டும், திரையுல பணியாளர்கள், விநியோகஸ்ர், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரது வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, தற்போது 100  சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தற்போது நடிகர் சிம்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் " எங்களது கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த,  தமிழ் திரையுலகிற்கு நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்த மாண்புமிகு  தமிழக முதல்வருக்கு நன்றி என ட்விட் செய்துள்ளார்.